ஜோதிடம்

குரு வணக்கம் 

குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஸ்வர: 

குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா:


 தஸ்மை ஸ்ரீ குரவே நம:







ஸ்ரீ உச்சிஷ்ட மகா கணபதி துணை 


கிருஷ்ணமூர்த்தி பத்ததி 
         வராஹ மிஹிரர் காலத்தில் உயர்தோங்கி உன்னத நிலையை பெற்றிருந்த சோதிடக்கலை இடைக்காலத்தில் சரியான பாண்டித்தியம் பெற்றோர் குறைந்தமையாலும், முழுமையான சோதிட ஞானம் பெறாதவர்களின் தவறான அணுமுறை காரணமாகவும், தவறாக கையாளப்பட்டு தெளிவற்று சோதிடக்கலை பொய்யானது என்ற நிலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இக்கலையை செம்மை படுத்தி அதில் புதிய கருத்துக்களை புகுத்தி அதன் பழைய புகழை  நிலைநாட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் குருநாதர் ஜோதிட மன்னன், ஜோதிட மார்த்தாண்ட்  புரொபசர் கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் பழைய   முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி, விஞ்ஞான முறையிலான  கருத்துக்களை புகுத்தி  ஜோதிடக்கலையை சீர்திருத்தி அமைத்தார், இவரது கண்டுப்பிடிப்புகளான பாவ ஆரம்ப முனையும், உபநட்சத்திராதிபதி முறையும், ஆளும் கிரக அற்ப்புதங்களும், சோதிட உலகில் மறுமலர்ச்சி ஏற்பட காரமாக அமைந்தன. இன்று  உலக நாடுகள் முழுவதிலும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

வளர்க கே.பி. சோதிடம் !                                                      வாழ்க கே.எஸ்.கே  புகழ் !