தியானம் ஒருவனுக்கு மனப்பக்குவத்தை தருகிறது.


'எது சரியானது, எது தவறானது, யார் உண்மை பேசுகிறார்கள்,  யார் பொய் பேசுகிறார்கள்,  யார் நடிக்கிறார்கள், யார் யோக்கியமானவர்கள் ' என்று தெரிந்து கொள்ளும் ஆற்றலை தியானம் கொடுக்கிறது. உங்களுடைய புத்தி நுட்பத்தை வளர்க்கிறது. கடினமான விடயங்களையும் எளிதாக புரிந்து கொள்ள வைக்கிறது.

தீவிரமான எண்ணங்களை ஒருமுக படுத்துவதன் மூலம் ஒருவன் நினைத்ததை அடையலாம். புகழ், செல்வம், பதவி போன்றவற்றை பெறலாம். அனால் இது தியானம் அல்ல.இதற்கு Auto suggestion என்று பெயர். ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் அல்லது நம்புவதன் மூலம் நீங்கள் இவற்றை அடையலாம்.

ஆனால் தியானம் என்பது முற்றிலும் வேறு. தியானம் செய்வது சொலபமான காரியமில்லை. தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வரும் நிலைதான் தியானம். நாம் செய்யும் காரியத்தை தவிர, வேறு எதிலும் சிந்தனை போகாமல், ஒரே காரியத்திலேயே மனம் லயித்து போய் விடுவதும் தியானம்தான்.

தியானம் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும்.


முதலில் பணிவு வேண்டும். எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் சுதந்திரமாக செய்து வரும் செயலாகும் அது. யாருடைய கட்டாயத்திர்க்ககவோ, அல்லது வற்புறுத்தலுக்காகவோ, கட்டுப்பட்டு செய்வதல்ல தியானம். 

தியானம் உங்களை மேன்மைப் படுத்துகிறது. உங்களை முதல் தர மனிதராக மாற்றுகிறது. உண்மையை கண்டுபிடிக்கும் திறமையை அது அளிக்கிறது. மத குருமார்கள், மத போதனையாளர்கள், துறவிகள் போன்றவர்கள் சொல்வதை அப்படியே விசாரணையின்றி ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொண்டு இரண்டாம் தர மனிதராக ஆகி விடுகிறீர்கள். அதற்குப்பின் நீங்கள் வாழ்க்கையில் வேடம் போடுபவர்களாக மாறி விடுவீர்கள்.

சுய அறிவு உள்ளவரிடம் தான் ஒரு விடயத்தை ஆழ்ந்து கவனிப்பதற்கான ஊக்கம் இருக்கும். ஒருவன் தன்னைப் பற்றி முழுக்க அறிந்து கொள்வதைத்தான் சுய அறிவு என்று கூறலாம்.


புனித நூல்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதற்காகவோ, மத போதனையாளர்கள் கூறினார்கள் என்பதற்காகவோ அவர்கள் கூறுவதை சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டால், நீங்கள் வாழ்கையில் உண்மையை கண்டுபிக்கமலேயே போய்விடுவீர்கள். உண்மையை கண்டுகொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர்களுக்குத்தான் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்.


எந்தவிதமான முயற்சியும் இல்லாமல், எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், இயற்கையாக உடலை வருத்திக் கொள்ளாமல் தியானம் கைகூட வேண்டும். இந்த தியானத்தை அன்றாட வாழ்கையில், நாம் கடைபிடிக்கலாம். எந்த சூழ்நிலையிலும் நாம் தியானம் செய்யலாம். இந்த பழக்கம் உங்களுக்கு வந்து விட்டால், வாழ்க்கையில் ஏறப்படும் தடைகள் தானாக விலகி செல்லும். மனம் லேசாக இருக்கும். 

நன்றி: ஹானிமன் மாத இதழ் ஆகஸ்டு 2002

No comments:

Post a Comment