வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயவரலாறு:இந்துக்களின் எழுச்சிக்கான ஆரம்பமுனை



சுமார் 650 ஆண்டுகளுக்குமுன்பு விஜயநகரப்பேரரசு காலத்தில் வேலூரில் சிற்றரசர்களாக இருந்த திம்ம ரெட்டி,பொம்மரெட்டி ஆகிய இருவரும் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினர்.கோவிலுக்குப் பாதுகாப்பாக கோட்டையையும்,அகழியையும் உருவாக்கினார்கள்.

அதன்பின் 200 ஆண்டுகள் கழித்து,இன்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்பு திப்புசுல்தான் படையெடுத்து வரும் செய்தி,வேலூருக்கு எட்டியது.சாமி இருந்தால் தானே கோவிலை இடிப்பார்கள் என தீர்க்கமாக யோசித்த இந்துக்கள்,வேலூரில் இருந்து 4 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் சத்துவாச்சாரியில் 7 அடி உயரமுள்ள ஜலகண்டேஸ்வரர் சிவலிங்கத்தை மறைத்து வைத்தனர்.இருப்பினும்,திப்புசுல்தான் படையெடுப்பில் கோவில் தாக்கப்பட்டு,சிற்பங்கள் சிதிலமடைந்தன.

காலப்போக்கில் வேலூர் கோட்டைகிறிஸ்தவ ஆங்கிலேயனின் வசமானது.இவர்கள் தங்களின் வழிபாட்டிற்கென ஒரு சர்ச்சையும்,பயன்பாட்டிற்கென சில கட்டிடங்களையும் கட்டினர்.கி.பி.1921 இல் சர்ச் மற்றும் சில கட்டிடங்களைத்தவிர,கோவில் மற்றும்கோட்டைகளை தொல்பொருள்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்தப்பின்னர், ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமியை வைக்க சிற்சில முயற்சிகள் நடைபெற்றுவந்தன.இந்தியாவின் முதல் துணைப்பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சீரிய முயற்சியால் குஜராத் மாநிலத்தில் மசூதியாக மாற்றப்பட்டிருந்த சோமநாதபுரம் சிவாலயம் மீண்டும் முழுக்கோயிலாக மாற்றப்பட்டது.இதனால்,கிடைத்த உந்து சக்தி,வேலூரிலும் மீண்டும் ஜலகண்டேஸ்வரரை நிறுவ முயற்சியானது.

கி.பி.1975 முதல் 1977க்குள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ரூ.1,00,000/-வரை நிதி திரட்டி சுவாமியை மீண்டும் நிறுவும்முயற்சி துவங்கியது.அப்போது மத்திய அரசு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காததால் இம்முயற்சி கைகூடவில்லை;வாரியார் சுவாமிகளிடம் இந்தப்பணிக்காக கொடுக்கப்பட்ட ரூ.1,00,000/-அவர் திருப்பிக்கொடுத்துவிட்டார்.
பின்னர்,அந்தத் தொகையைக்கொண்டு வாரியார் சுவாமிகள் பெயரில் ஒரு திருமணமண்டபம் கட்டப்பட்டது.

இந்நிலையில் கி.பி.1980 ஆம் ஆண்டில் இந்து முன்னணி துவக்கப்பட்டது.இந்துமுன்னணி மாநில அமைப்பாளராக இருந்த இராம.கோபாலன் அவர்கள் வேலூருக்கு விஜயம் செய்தார்.அப்போதுதான் வேலூரில் இந்துமுன்னணியை உருவாக்கி வேலூர் ஜலகண்டேஸ்வரரை பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஆர்.எஸ்.எஸ்.கோட்ட அமைப்பாளராக இருந்த வீரபாகு அவர்கள் தலைமையில் இந்துமுன்னணி,பொதுமக்களின் ஆதரவுடன் 14.3.1981 அன்று ஜலகண்டேஸ்வரர் வேலூர் கோட்டையில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த வெற்றியே,அயோத்தியில் இராமர் ஆலயம் மீட்பதற்கு மாபெரும் உந்துசக்தியாக உருவெடுத்தது.

No comments:

Post a Comment