நீங்கள் கடக ராசியில் பிறந்தவராக இருந்தாலோ, அல்லது உங்களுக்கு சந்திர தசை நடந்து கொண்டிருந்தாலோ, நீங்கள் ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் - நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலோ - நீங்கள் ஒரு முறை திருப்பதி சென்று Volunteer சேவை செய்து வந்தால் உங்களுக்கு - மிக அற்புதமான பலன்கள் கிடைக்கும். சேவை செய்யும் போது - இடையில் பௌர்ணமி தினம் வந்தால் , இன்னும் விசேஷம்.
செல்வத்தின் அதிபதி ஸ்ரீவெங்கடாஜலபதியின் இருப்பிடம் திருப்பதி.அங்கு குறைந்த பட்சம் திங்கள் முதல் ஞாயிறு வரை தங்கி பக்தர்களுக்கு சேவை செய்ய விருப்பமா? ஒரு நாளுக்கு குறைந்தது 6 மணி நேரம் சேவையில் ஈடுபட வேண்டும்.மேலும் சனிக்கிழமையன்று சேவையில் ஈடுபடுவோருக்கு சிறப்பு தரிசனம் உண்டு. ஸ்ரீவாரி சேவா உறுப்பினராகுங்கள்.சரி! எப்படி உறுப்பினராவது?
குறைந்தது 10 பேர் கொண்ட குழுவை பின்வரும் முகவரிகளில் ஏதாவது ஒன்றில் பதிய வேண்டும்.அப்படிப் பதிந்தால் திருப்பதியில் நாம் விரும்பும் ஏதாவது 10 நாளுக்கு சேவை செய்யச் செல்லலாம்.இதற்கு கட்டணம் கிடையாது.திருப்பதியில் சாப்பாடு,தங்குமிடம் இலவசம்.அதுவும் தேவஸ்தான ஊழியராக அந்த 10 நாட்களில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.நீங்கள் சேவா ஊழியர் என்பதற்கு அடையாளமாக கழுத்தில் காவித் துண்டு அணிந்திருப்பீர்கள்.
ஸ்ரீவாரி சேவா:திரு.கண்ணபிரான் 94431-36763.0431-27822887. ஸ்ரீவாரி சேவா அமைப்பு:திரு.ஏ.பி.நாகராஜன் திருப்பதி தேவஸ்தான கோவில், வெங்கட்நாராயணா சாலை,தி.நகர்,சென்னை-17. 044-24343535. ஆங்கில மாதத்தின் முதல் சனி மதியம் 2 முதல் 4 மணிக்கு இங்கு வருக!
ஏ.பி.என். குரூப் புதிய எண்:16,டி.டி.கே.சாலை, முதல் கிராஸ் தெரு,ஆழ்வார்பேட்டை,சென்னை-18. 044-24334700,24331776.
சேவா சதர்ன் ஹால்,மேல்திருப்பதியில் பஸ் நிலையம் அருகில் உள்ளது.இங்கும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment