விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த அம்பிகையின் அனுக்கிரகம் பூரணமாகப் பெற்ற , மகா கவி காளி தாசரின் மூலம் இந்த உலகுக்கு கிடைத்த , பல அரும்பெரும் பொக்கிஷங்களில் ஜோதிடமும் ஒன்று. . அவரால் கிடைக்கப் பெற்றதே இந்த இந்து லக்கினம் பற்றிய குறிப்பு.
அவரது "உத்தர காலமிர்தம் " - நிஜமாகவே ஒரு அமுதம் தான். சமஸ்கிருதத்தில் உத்தர் என்றால் பதில் . KBC நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் சொல்வாரே ஞாபகம் இருக்கிறதா? " சஹி உத்தர். " அப்படினா சரியான பதில்.
உத்தர காலமிர்தம் என்றால் - காலா காலத்திற்கும் பொருந்தும் , அமுதம் போன்ற - கேள்வி பதில் தொகுப்பு என்ற பொருள் கொள்ளுங்கள்,
சரி, இந்து லக்கினம் பற்றிய தகவல்களுக்கு வருவோம்..
இதைப் பற்றி , நிறைய ஜோதிடர்களுக்கு தெரியாது என்பது என் அனுபவக் கருத்து. அது போன்ற , ஒரு அரிய விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி.
உங்கள் ஜாதகத்தில் - எதுவும் உச்ச கிரகம், ஆட்சி கிரகம் இல்லை என்ற போது , இந்து லக்கினத்தில் நின்ற கிரகத்தின் தசை வருகிறதா என்று பாருங்கள்... நீங்கள் கோடீஸ்வரராவது 100 % உறுதி.
உங்களுக்கு கிடைக்கும் , பண வரவு பற்றி தெரிந்து கொள்ள - இரண்டாம் இடம், குரு பகவான் நிலைமை தவிர இந்து லக்கினமும் தெரிந்தால் நல்லது.
சரி, இதை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்..
உங்கள் ஜாதக கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் :
லக்கினம், ராசி --- என்ன என்று பாருங்கள் :
ஒவ்வொரு கிரகத்திற்கும் - இந்து இலக்கின விதிப்படி - கலை எண்கள் என்று உண்டு. "ஒளி எண்கள் " என்றும் வைத்துக் கொள்ளலாம்.
சூரியனுக்கு - 30
சந்திரனுக்கு - 16
செவ்வாய்க்கு - 6
புதனுக்கு - 8
சுக்கிரனுக்கு - 10
குருவுக்கு - 12
சனிக்கு - 1
ராகு, கேதுக்கு - கலைகள் கிடையாது.
உங்கள் லக்கினத்தில் இருந்து - ஒன்பதாம் வீடு என்ன என்று பாருங்கள் . அந்த வீட்டின் அதிபதி யார் ? அவருக்கு எத்தனை கலை என்று பாருங்கள்.
அதேபோலே - உங்கள் ராசிக்கு - ஒன்பதாம் வீட்டின் அதிபர் , அவருக்கு எத்தனை கலை எண் என்று பாருங்கள் .
இரண்டு கலை எண்களையும் கூட்டி , வரும் கூட்டுத்தொகையை - 12 ஆல் வகுக்க வேண்டும். வகுத்த பிறகு வரும் எண்ணை, சந்திரன் நின்ற வீட்டில் இருந்து 1 ...2 ...3 ... என்று எண்ணி வாருங்கள். எந்த வீட்டில் மீதி தொகை முடிகிறதோ .. அந்த வீடு .. இந்து லக்கினம் என்று பெயர்...
இந்த இந்து லக்கினத்தில் இருந்து வரும் ஒரு கிரகத்தின் தசை நடக்கிறது என்றால்... உங்களுக்கு , பொன்னும் பொருளும், புகழும் குவியும்...
ஒரு உதாரணத்திற்கு - விருச்சிக லக்கினம் , சிம்ம ராசி என்று வைத்துக் கொள்வோம்.
விருச்சிகத்திற்கு - ஒன்பதாம் வீடு - கடகம் . அதிபதி - சந்திரன் . அவரது கலை எண் : 16 .
சிம்ம ராசிக்கு - ஒன்பதாம் வீடு - மேஷம் . அதிபதி - செவ்வாய். கலை எண் : 6.
இரண்டையும் கூட்டினால் - வருவது : 16 + 6 = 22 .
12 ஆல் வகுக்க மீதி வருவது ::: 10 . இதை சந்திரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து என்ன , 10 ஆம் வீடாக வருவது ரிஷபம். இந்த ஜாதகருக்கு - ரிஷபமே இந்து லக்கினம் ஆகும்.
ரிஷபத்தில் இவருக்கு நிற்கும் கிரகத்தின் தசை நடந்தால் - அவருக்கு , அந்த தசை காலம் - அற்புதமான ஒரு காலமாக இருக்கும். அது அசுப / தீய கிரகமாகவே இருந்தாலும் , இது பொருந்தும்.
அவரது பலன் அளவு வேறுபட வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு நடை முறையில் - ஆளும் கட்சி கவுன்சிலரும் அதிகாரம் படைத்தவர்தான், MLA , MP , மினிஸ்டர் இப்படி ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடும் இல்லையா? அதே மாதிரி ...
இயல்பில் இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு பகை வீடு , இல்லை பகை கிரகம், நீச கிரகம் அங்கே இருந்தால் - பலன் கொஞ்சம் குறையும். ஆனால் , அபரிமித பலன்கள் கண்டிப்பாக ஏற்படும்.
அதே வேளையில் , இந்த இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு , மறைவு ஸ்தானமாக இல்லாமல் ( 3 ,6 ,8 ,12 ) - இந்து லக்கினத்தில் - ஒரு சுப கிரகம் இருந்து , அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று தசை நடந்தால் - அவர் உலக புகழ் பெரும் கோடீஸ்வரராவார்.
இதைத் தவிர சில நுணுக்கமான விதிகளும், விதி விலக்குகளும் உண்டு. அதை எல்லாம் நீங்கள் - தனியே , உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது - ஆராய்ச்சி
செய்து கொள்ளுங்கள்.
குருவுக்கு 10 கலை எண் உண்டு
ReplyDelete