விநாயகரை வணங்கி

2
ஸ்ரீ உச்சிஷ்ட மகா கணபதி துணை 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு


ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!


விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
     பாத சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்
     வண்ண மருங்கில் வளர்ந்தழ தெறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
     வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்
     நெஞ்சிற் குடி கொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாவிரு புயமும்
     மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
     திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளிமார்பும்

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான
     அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஷிக வாகன
     இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
     மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்
     பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
     திருவடி வைத்துத் திறமது பொருளென
வாடர் வகைதான் மகிழ்ந் தெனக் கருளிக்
     கோடாயுதத்தாற் கொடு வினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்
     தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
     இன்புறு கருனை யினிதெனக் கருளி
கருவிக ளொடுக்குங் கருத்தினை அறிவித்து
     இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
     மலமொரு மூன்றின் மயக்க மருந்தே
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
     ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத் தங்குச நிலையும்
     பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
     கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
     நான்றெழ பாம்பின் நாவிலுணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
     விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
     காலா லெழுப்புங் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
     குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
     உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக நூலமுஞ் சதுர்முக சூட்சமும்
     எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
     தெரிஎட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
     இருத்திமுத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்தெனக்கருள் செய்து
     முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கு மனமும் இல்லா மனோலயந்
     தேக்கியே என்றன் சிந்தை தெரிவித்து
இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன
     அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
     அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தின் னுள்ளே சதாசிவங் காட்டி
     சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
     கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமு நீறும் விளங்க நிறுத்திக்
     கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தி னரும் பொருள் தன்னை
     நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தென்னை யாண்ட
     வித்தக விநாயக விரைகழல் சரணே! 



____________________________________________________________________
 சோதிடம், திருமணப் பொருத்தம் , பிரசன்ன ஆருடம், எண்கணிதம், கைரேகை மற்றும் வாஸ்து ஆகியவை சிறந்த முறையில் பார்க்கப்படும்.

ஜோதிட ஆலோசனை பெற உங்கள் பெயர்பிறந்த தேதி,பிறந்த நேரம்பிறந்த ஊர், தாய், தந்தை பெயர் எழுதி, உங்கள் கேள்விகளுடன் எனக்கு மெயில் அனுப்பவும்.    murugan.kpd@gmail.com


                    ஆலோசனை கட்டணம்     Rs.1000/-
___________________________________________________________________

No comments:

Post a Comment