கடமையைச் செய்யாமல் விடுதலே கடன் எனப்படும்.
தேவகடன் என்பது நித்திய பூஜையைச் செய்யாமல் விடுவது;குல தெய்வத்தை வழிபடாமல் இருப்பது;கோயில் திருப்பணியை தொடங்கிவிட்டு பாதியில் விட்டுவிடுவது; நேர்த்திக்கடன்களை செய்யாமல் விடுவது;
தவிர கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருடுதல்;கோவில் சிலைகளைத் திருடுதல்;கோவிலின் பெயரைச்சொல்லி வருமானம் பார்த்தல்; கோயிலுக்குள் தகாத காரியங்கள் செய்தல் ஆகும்.
இவற்றை ஜாதகம் வாயிலாக, லக்னத்துக்கு 5ஆம் இடம்,சூரியன்,சனி இவர்களின் இருப்பைக் கொண்டு அறியமுடியும்.
ரிஷி கடன் இந்த கலிகாலத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.ஏனெனில், தற்காலத்தில் நிஜமான ரிஷிகள் மிகக்குறைவாக இருக்கின்றனர்.
முற்காலத்தில் வீடு தேடிவந்த ரிஷிகளை சரியாக உபசரிக்காமல் விடுவதால் ரிஷிகள் விடும் சாபமே ரிஷிகடன் ஆகும்.இந்த ரிஷிகடனை 12ஆம் இடம்,குருவின் நிலை,12 மற்றும் 9 ஆம் இடத்து அதிபதிகளைக் கொண்டு அறியலாம்.
ரிஷிகடனைத் தீர்க்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்,தண்ணீர் ஏற்பாடு செய்தல்,ஆன்மீகமடங்களில் உதவி செய்தல்,சுத்தப்படுத்துதல், நோயாளிகளுக்கும்,கோவில்களுக்கு
பித்ருக்கடன் என்பது தாய் தந்தையரை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும்,அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு திதி செய்யாமல் இருத்தல்,அவர்கள் எவ்வளவு அரக்கக் குணங்களுடன் இருந்தாலும் அதை சகிக்காமல் அவர்களிடம் சாபம் வாங்குமளவுக்கு சேஷ்டைகள் செய்யாமல் இருத்தல் போன்றவைகளால் உருவாகுவது.
இதனால் 7 தலைமுறைகள் பாதிக்கப்படும்.தந்தை வழியில் செய்த காமக்குற்றங்கள், மோசடி,பெண்ணை ஏமாற்றிக்கற்பழித்தல்,உடன் பிறந்தோர் சொத்து அபகரிப்பு இவற்றால் 7 தலைமுறைகள் மிகவும் சிரமப்படுவர்.இந்த பித்ருக்கடனை அவரவர் பிறந்த ஜாதகத்தில் 5ஆம் இடம்,9 ஆம் இடம்,ராகு,கேது,சனி இவற்றைக் கொண்டு அறியலாம்.
சித்தர்களின் தலைவர் அகத்தியர் கர்ம காண்டம் என்னும் நூலில் செய்த பாவங்களுக்குரிய விளைவுகளை விரிவாக விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும்.அதே சமயம் திரும்பவும் அதே பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்.
பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால் பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன.அவரவர் ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம்(பூஜை,யாகம் செய்வது மட்டுமல்ல;நாம் நமது மனப்பூர்வமான இறை காரியங்கள் மட்டுமே நம்மை கடன்களிலிருந்து விடுவிக்கும்.நாம்தான் நமது பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.)
தூய பக்தி, நேர்மையான வாழ்வு, மனமார்ந்த தெய்வீக சேவை இவற்றால் நிம்மதியாக வாழமுடியும்.
No comments:
Post a Comment