கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் பணியாரம் சுடும் பாட்டி - சிவ ராத்திரியன்று நடக்கும் அதிசயம் !

து நமது இணையத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்டதின் மறுபதிப்பு. நாம் ஏற்கனவே இந்த பதிவை பதிப்பித்தவுடன், அதை வாசித்த ஏராளமான அன்பர்களின் வாழ்வில் அன்னை நடத்திய அதிசயங்கள் , மயிர் கூச்செறிய வைக்கும்.. 

சிவ ராத்திரி நெருங்குவதால், நமது வாசகர்களுக்கு ஒரு நினைவூட்டல் படுத்துவதின் பொருட்டு  மற்றும் தினமும் புதிதாக வரும் வாசகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மீண்டும் ஒருமுறை ..........
 

உங்களது எல்லா பிரச்னைகளையும் போக்கும் பத்திரகாளி
கலி என்றால் துன்பம் என்று பொருள்.கலியுகம் என்றால் துன்பயுகம் என்றுதான் அர்த்தம்.பிறக்காத குழந்தையும், இறந்து போன மனிதனும் தான் நிம்மதியாக வாழ்பவர்கள்.அவர்களை விட நிம்மதியாக வாழ்ந்து வருபவர்கள் தான் பத்திரகாளியை வழிபடுபவர்கள்.


இந்தியா,தமிழ்நாடு மாநிலம்,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் ஊருக்குள் உள்ளது முதலியார்பட்டித்தெரு. அங்கே,மக்கள் வசிப்பிடத்துக்கு நடுவே அமைந்துள்ளது  ஸ்ரீ பத்திரகாளி யம்மன் கோவில்!
முதலியார்பட்டித் தெரு நெசவாளர்கள் வாழும் பகுதியாகும்.அங்கே சில நூற்றாண்டுகளாக அமர்ந்து கேட்ட வரம்  தருபவள் பத்திரகாளி!!

உங்களுக்கு தீராத கடன் அல்லது நோய் அல்லது செலவு அல்லது எதிரிகள் உள்ளதா?இவை அனைத்தும் தீர வேண்டுமா?





அவர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் போதும். ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10.30 மணிக்கு பவுர்ணமி பூஜை துவங்கி நள்ளிரவு 1.20க்கு நிறைவடைகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருட சிவராத்திரியன்றும் கொதிக்கும் நெய்யில் ஒரு 60 வயது பாட்டி வெறும் கையால் பணியாரம் சுட்டுவருகிறார்.கடந்த 30 வருடங்களாக இந்தக் காரியத்தைச் செய்து வருகிறார்.அந்த பாட்டியின் கையில் சிறு மாற்றம் கூட இருப்பதில்லை.கரண்டியைப் பயன்படுத்துவதில்லை.ஒரு முறை நேரில் வந்து பார்க்கவும். விஜய் டி.வி. யின் நிஜம் பகுதியிலும் இதை ஒளி பரப்பினார்கள்.. 

இந்த பத்திரகாளி நிகழ்த்தும் அதிசயங்கள் ஏராளம்:அவற்றில் சில..


சாதரணமாக தொழில் செய்து வந்த ஒரு நபர் இங்கு தினமும் ஒரு முறை வீதம் 4 வருடங்கள் வந்து வழிபட்டார்.இப்போது அவரது தொழில் சொத்து மதிப்பு சில கோடிகள்....

8 வருடமாக டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு நடையாய் நடந்த ஒருவர் இந்த பத்திரகாளியை சில மாதங்கள் தினமும் வழிபட்டுக் கொண்டே வந்தார். ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லாத விதத்தில் டைவர்ஸ் கேஸ் முடிவுக்கு வந்துவிட்டது.

பிறவியிலிருந்தே மனநிலை சரியில்லாமல் இருந்த ஒரு 21 வயது இளைஞன் இந்த கோவிலுக்கு 2 வருடமாக அழைத்து வரப்பட்டான்.தற்போது சராசரி மனிதனாகி விட்டான்.தற்போது அவன் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டான்.

ஒரு டெய்லர் அவர்,14 வருடங்களாக வந்து கொண்டே இருக்கிறார்.மிக சாதாரண நிலையிலிருந்தவர்.கடைக்கு இடம் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்.இது வரை 20 முறை தனது டெய்லர் கடையை மாற்றியிருப்பார்.தற்போது,ஊருக்கு இதயப் பகுதியில்-நிரந்தரமான கடை அவருக்கு அமைந்துவிட்டது.சுமார் 20 பேருக்கு  நிரந்தரவேலை தருமளவிற்கு வளர்ந்து விட்டார்.  இருந்தபோதிலும், இன்றும் அந்த டெய்லர் ஒரு நாள் விடாமல்  பத்திரகாளியை வழிபட்டபின்பே தனது  கடையைத் திறக்கிறார்.

 80 % மதிப்பெண் வாங்கிக் கொண்டு இருந்த பையன் , ஞாயிறு தவறாமல் ராகு கால நேரத்தில்  இங்கு வர, அவன்  +2 வில்  93 % மதிப்பெண் பெற்று  அரசு கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறான். 

எனக்கு தெரிந்த அன்பர் ஒருவர் , சென்னையில் வசிப்பவர் --- ஒருமுறை இந்த கோவில் வந்து , அவரது நீண்ட நாள் பிரச்சினை உடனடியாக தீர, இன்று அம்மனின் மஞ்சள் காப்பு இல்லாமல் அவர் வீட்டில் இருந்து வெளியே வருவதே இல்லை... கடுமையான கடன் தொல்லையில்  இருந்த அவரது சொத்து மதிப்பு இன்று ஒரு கோடியை தாண்டி விட்டது... ( இரண்டே வருடங்களில்... )  - மஞ்சள் காப்பு என்பது குங்குமத்திற்கு பதிலாக வழங்கப்படும் மஞ்சள் பிரசாதம்.. 

மேலும் முறை கேடான உறவுகள் இருப்பவர்கள், உடனடியாக திருந்த இந்த அம்மன்  அருள் பாலிக்கிறாள். சிறிய கோவில் தான். ஆனால் இந்த அம்மனின் அருள் , நீங்கள் நேரில் வரும்போது நிச்சயம் உணர முடியும். 

ஆக,நிம்மதியும்,செல்வவளமும் 100% காரண்டி.    

உங்களுக்கு அஷ்டம சனி, ஏழரை சனி, நடப்பதை இருந்தால் உடனடியாக அம்மனை நாடி சரணடையவும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் நீங்கள்கலந்து கொண்டாலே -- உங்களுக்கு பரிபூரண நிம்மதி கிடைப்பது உறுதி... 
 
சத்தமே இல்லமால் சில சித்தர்களை உருவாக்கி கொண்டு இருக்கிறாள் அன்னை. தினமும் வரும் பக்தர்கள் , அன்னை பேசுவதை உணர்கிறார்கள்...  

நீங்கள் சதுரகிரிக்கு செல்லுபவராய் இருந்தால் , அவசியம் ஒருமுறை இந்த பத்திரகாளியை தரிசித்து வாருங்கள்...  இங்கிருந்து சதுரகிரி 25 கி.மீ. தான். 

No comments:

Post a Comment