உங்கள் தின வழிபாட்டிற்கு உதவும் நவக்ரக ஸ்தோத்ரம்






ஸூர்ய நமஸ்காரம்

ஜபா குஸூம ஸங்காசம்                            சீலமாய் வாழச் சீரருள் புரியும்
காச்யபேயம் மஹாத்யுதிம்!                      ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்                        சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!              வீரியா போற்றி, வினைகள் களைவாய்



சந்த்ர நமஸ்காரம் 

ததி சங்க துஷாராபம்                                 எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
ஷீரோதார்ணவஸம்பவம்!                       திங்களே போற்றி, திருவருள் தருவாய்
நமாமி சசினம் ஸோமம்                          சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சம்போர் மகுடபூஷணம்!!                         சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி


அங்காரக நமஸ்காரம் 

தரணீ கர்ப்ப ஸம்பூதம்                             சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
வித்யுத்காந்தி ஸப்ரபம் !                        குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
குமாரம் சக்தி ஹஸ்தம் ச                     மங்கள் செவ்வாய் மலரடி போற்றி
மங்களம் ப்ரணமாம் யஹம்!!               அங்காரகனே அவதிகள் நீக்கு


புத நமஸ்காரம் 

ப்ரிங்கு கலிகா ச்யாம்                                   இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
ருபேணா ப்ரதிமம் புதம்!                              புத பகவானே பொன்னடி போற்றி
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்   பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே 
தம் புதம் ப்ரணமாம் யஹம்!!                     உதவியே யருளும் உத்தமா போற்றி


குரு நமஸ்காரம்

தேவானாம் ச ரிஷஷீணாம் ச                        குணமிகு வியாழக் குருபகவானே
குரும் காஞ்சன ஸந்நிபம்!                               மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
புத்தி பூதம் த்ரிலோகேசம் ருகஸ்பதி         வியாழப் பரதகுரு நேசா
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!                       க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்


சுக்ர நமஸ்காரம்

ஹிமகுந்த ம்ருணாளாபம்                               சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
தைத்யானாம் பரமம் குரும்!                           வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்                          வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!                         அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே


சனி நமஸ்காரம் 

நீலாஞ்ஜன ஸமாபாஸம்                            சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!                                 மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்                         சச்சரவின்றிச் சாகா நெறியில்
தம் நமாமி சனைச்சரம்!!                               இச்சகம் வாழ இன்னருள் தா தா.


ராகு நமஸ்காரம் 
அர்த்தகாயம் மஹாவீர்யம்                       அரவெனும் ராகு அய்யனே போற்றி
சந்தராதித்ய விமர்தனம்!                           கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்                    ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!!               ராகுக்கனியே ரம்மியா போற்றி


கேது நமஸ்காரம் 

பலாச புஸ்பஸ்ஙகாசம்                           கேதுத் தேவே கீர்த்தித் திருவே
தாராகாக்ரஹ மஸ்தகம்!                        பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்                      கோரம் வாதம், வம்பு வழக்கு களின்றி
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!!              கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி

No comments:

Post a Comment