பண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ [தாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்] திருவருட்செல்வர்




பண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ
மன்ணணினா வலன்செய் மறை காடரோ
கண்ணினா உனை காண கதவினை
திண்ணமாக திறந்தருள் செயமிலே
தாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
மனக்கதவம் திறந்த பரம்பொருளே
திருக்கதவும் திறக்க வரமருளே
மனக்கதவம் திறந்த பரம்பொருளே
திருக்கதவும் திறக்க வரமருளே
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
ஆடும் திருவடி கோலம் அறிந்திட அரனே தாழ் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட சிவனே தாழ் திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமறை புகழ் பெற அன்பே தாழ் திறவாய்
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன் ஒளியே தாழ் திறவாய்
இறைவா தாழ் திறவாய் எம் தலைவா தாழ் திறவாய்
கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்
சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே

மதுரம் மறை நான்காம் துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறை காட்டுறை மைந்தா
இது நன்கு இறை பெய்த்தருள் செய்த எனக்கும்
கதவன் திருகாப்பு கொள்ளும் கருத்தாக

No comments:

Post a Comment