வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயவரலாறு:இந்துக்களின் எழுச்சிக்கான ஆரம்பமுனை



சுமார் 650 ஆண்டுகளுக்குமுன்பு விஜயநகரப்பேரரசு காலத்தில் வேலூரில் சிற்றரசர்களாக இருந்த திம்ம ரெட்டி,பொம்மரெட்டி ஆகிய இருவரும் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினர்.கோவிலுக்குப் பாதுகாப்பாக கோட்டையையும்,அகழியையும் உருவாக்கினார்கள்.

அதன்பின் 200 ஆண்டுகள் கழித்து,இன்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்பு திப்புசுல்தான் படையெடுத்து வரும் செய்தி,வேலூருக்கு எட்டியது.சாமி இருந்தால் தானே கோவிலை இடிப்பார்கள் என தீர்க்கமாக யோசித்த இந்துக்கள்,வேலூரில் இருந்து 4 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் சத்துவாச்சாரியில் 7 அடி உயரமுள்ள ஜலகண்டேஸ்வரர் சிவலிங்கத்தை மறைத்து வைத்தனர்.இருப்பினும்,திப்புசுல்தான் படையெடுப்பில் கோவில் தாக்கப்பட்டு,சிற்பங்கள் சிதிலமடைந்தன.

காலப்போக்கில் வேலூர் கோட்டைகிறிஸ்தவ ஆங்கிலேயனின் வசமானது.இவர்கள் தங்களின் வழிபாட்டிற்கென ஒரு சர்ச்சையும்,பயன்பாட்டிற்கென சில கட்டிடங்களையும் கட்டினர்.கி.பி.1921 இல் சர்ச் மற்றும் சில கட்டிடங்களைத்தவிர,கோவில் மற்றும்கோட்டைகளை தொல்பொருள்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்தப்பின்னர், ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமியை வைக்க சிற்சில முயற்சிகள் நடைபெற்றுவந்தன.இந்தியாவின் முதல் துணைப்பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சீரிய முயற்சியால் குஜராத் மாநிலத்தில் மசூதியாக மாற்றப்பட்டிருந்த சோமநாதபுரம் சிவாலயம் மீண்டும் முழுக்கோயிலாக மாற்றப்பட்டது.இதனால்,கிடைத்த உந்து சக்தி,வேலூரிலும் மீண்டும் ஜலகண்டேஸ்வரரை நிறுவ முயற்சியானது.

கி.பி.1975 முதல் 1977க்குள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ரூ.1,00,000/-வரை நிதி திரட்டி சுவாமியை மீண்டும் நிறுவும்முயற்சி துவங்கியது.அப்போது மத்திய அரசு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காததால் இம்முயற்சி கைகூடவில்லை;வாரியார் சுவாமிகளிடம் இந்தப்பணிக்காக கொடுக்கப்பட்ட ரூ.1,00,000/-அவர் திருப்பிக்கொடுத்துவிட்டார்.
பின்னர்,அந்தத் தொகையைக்கொண்டு வாரியார் சுவாமிகள் பெயரில் ஒரு திருமணமண்டபம் கட்டப்பட்டது.

இந்நிலையில் கி.பி.1980 ஆம் ஆண்டில் இந்து முன்னணி துவக்கப்பட்டது.இந்துமுன்னணி மாநில அமைப்பாளராக இருந்த இராம.கோபாலன் அவர்கள் வேலூருக்கு விஜயம் செய்தார்.அப்போதுதான் வேலூரில் இந்துமுன்னணியை உருவாக்கி வேலூர் ஜலகண்டேஸ்வரரை பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஆர்.எஸ்.எஸ்.கோட்ட அமைப்பாளராக இருந்த வீரபாகு அவர்கள் தலைமையில் இந்துமுன்னணி,பொதுமக்களின் ஆதரவுடன் 14.3.1981 அன்று ஜலகண்டேஸ்வரர் வேலூர் கோட்டையில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த வெற்றியே,அயோத்தியில் இராமர் ஆலயம் மீட்பதற்கு மாபெரும் உந்துசக்தியாக உருவெடுத்தது.

செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்


அறிவியல்பூர்வமான இந்து மதம்

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை...

அகஸ்தியரை நேரில் தரிசிக்க முடியுமா?

நீங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பழக்கம் இருந்தால், கிரிவலப் பாதையில் அகஸ்திய ஆசிரமம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அகஸ்திய விஜயம் என்ற மாத இதழை விற்பனை செய்கின்றனர். அவர்களின் நிறைய இதழ்கள் , வெளியீடுகள் - ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு நல்ல தீனியாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் வாங்கிப் படித்துப் பாருங்கள். 

ஆன்மீகத்தேடல் உள்ளவர்கள் படிக்க வேண்டிய மாத இதழ் அகஸ்திய விஜயம்

சுமார் 10 வருடங்களாக சென்னையிலிருந்து வெளிவரும் ஆன்மீக,ஆத்மப்பசியுடனிருப்பவர்களுக்கு வழிகாட்டும் அற்புத மாத இதழ்:அகஸ்திய விஜயம்.

கலிகாலத்தில் என்ன விதமான மாற்றங்கள் நடைபெறும்?நாம் அதற்கேற்றாற்போல்,நமது வழிபாடுகள் என்னென்ன செய்ய வேண்டும்?நமது கடன் தீர,நாம் முக்தி பெற, குடும்பம் ஒற்றுமையாக வாழ,சித்தர்களைப்பற்றிய ஏராளமான ரகசியங்கள்,சித்தத் தன்மையை அடைவது எப்படி? திருஅண்ணாமலையின் மகிமைகள்,தமிழ்நாட்டின் பழமையான கோவில்களின் ஆன்மீக சூட்சும ரகசியங்களை வெளியிட்டுவரும் அகஸ்திய விஜயம் நாம் மாதம் தோறும் வாசிக்கவேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வெளிவரும் அகஸ்திய விஜயத்தை மொத்தமாக நமது ஆன்மீகக்கடலில் பதிவேற்ற விருப்பம்தான்;நேரமும் இல்லை;இணையதள மையத்துக்குச் (ஓரளவுக்குமேல்)செலவழிக்கவும்
முடியவில்லை;எனவே,விருப்பமுள்ள ஆன்மீகக்கடல் வாசகர்கள் ரூ.240/- மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் அனுப்பி ஓராண்டுவரை அகஸ்திய விஜயம் பெற்றிடுங்கள்.
முகவரி:ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயா

சேம்பர் எண்:7,சாகாஸ் காம்ப்ளக்ஸ்,
போஸ்ட் பாக்ஸ் எண்:6303,
4,ஸ்ரீகபாலீஸ்வரர் தெற்கு மாடவீதி,மயிலாப்பூர்,சென்னை -600 004.
போன்:044 24957276,24613818.

குறிப்பு:ஆன்மீகத்தில் மலர விரும்புவோர்க்காக இந்த பதிவு வெளியிடப்படுகிறது.


நீங்கள் நாடி ஜோதிடம் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் இப்போது எத்தனையோ போலிகள் வந்து விட்டார்கள். அகஸ்தியர், வசிஷ்டர் என்று நிறைய நிறைய நாடி ஜோதிட நிலையங்கள் வந்துவிட்டன. ஆனால் உங்களுக்கான நாடி கிடைத்துவிட்டால், உங்கள் பெருவிரல் ரேகை மட்டுமே வைத்து உங்கள் பெயர், அப்பா, அம்மா பெயர் , பிறந்த நட்சத்திரம் , வருடம் என்று ஜாதகமே கணித்துவிடுகிறார்கள். இது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் அதன் பிறகு.... எல்லோரும் ஒரே பார்முலா  தான். யாரவது, நல்ல , பக்காவான நாடி ஜோதிடர்கள் உள்ளார்களா என்று நண்பர் வட்டாரத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோதுதான் எதேச்சையாக , ஒரு அகத்திய விஜயம் இதழ் கிடைத்தது.
உங்களுக்கு அகஸ்திய  தரிசனம்  வேண்டுமா?  கீழ்க்கண்ட முறையை பின்பற்றுங்கள் என்று... ... எனக்கு மிகவும் தெரிந்த நண்பர்ஒருவர் இதைச் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு அகஸ்திய தரிசனம் கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அதைப் பற்றி கூற மறுத்துவிட்டார்.. ஆனால் அவரது நடவடிக்கையில் நிறையவே நல்ல மாற்றங்களை உணர முடிகிறது.  விருப்பம் உள்ள அன்பர்கள் பின்பற்றிப் பாருங்கள்


கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.

மந்திரம்:

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.


இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.


முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.


அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை.

ஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்

எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும், அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.

முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்துக்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை "ரிலாக்ஸ்" (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான
மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.

முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம்.

சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

இந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்.

நன்றி:http://youthful.vikatan.com/youth/Nyouth/ganesan100310.asp

காதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)

மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். 

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!

ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

[DSCF0083.JPG] 
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி  தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத்  தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

 இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும் .

சர்வபிரச்னைகளுக்கும் நிவாரணி: ஓம் சிவசிவ ஓம்

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள்.இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான். நமசிவாய,சிவாயநம,சிவாயசிவ,சிவசிவ :இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும்.இல்லாவிட்டால்,எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.மந்திர சக்தியும் வேண்டும்;குடும்பத்திலும் இருக்க வேண்டும்;அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,பல சிவனடியார்களை அணுகி,அடிபணிந்து வேண்டிக்கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது.அம்மந்திரம் தான் “ஓம் சிவசிவ ஓம்”/
இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும்,எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.
இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை;ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது.அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்) பிறகு விநாயகரை வழிபட வேண்டும்.பிறகு தினமும் காலை 108 முறையும்,மாலை 108 முறையும் ஓம் சிவசிவ ஓம் என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரவேண்டும்.ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,நோய்கள் தீர ஆரம்பிக்கும்.உடனே விட்டுவிடக்கூடாது.
அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்.நம்பிக்கைதான் முதலீடு.ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்;பவுர்ணமி,அமாவாசை,சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.
எந்த மலையில் இருந்தாலும்,எந்த கடலில் இருந்தாலும்,எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும்.அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்துக்கொண்டு சென்றால்,அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.

பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி;மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்;வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது.ஆனால்,திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால்,அப்போது மட்டும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கலாம்.

பதவி உயர்வு,பதவி வேண்டுவோர் ஞாயிறு இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.
நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் திங்கள் கிழமை நோன்புடன் இதை ஜபிக்க வேண்டும்.
தீராத நோய்கள் தீர செவ்வாய்க்கிழமையன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும்.
கல்வி,வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய புதன் கிழமைகளில் நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.

ஆத்மஞானம் பெற வேண்டின் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.
பண நெருக்கடி நீங்கவும்,செல்வ வளம் பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
கண்திருஷ்டி,செய்வினைக் கோளாறு,மனக்கோளாறு நீங்கிட சனிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.

சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது மாத சிவராத்திரியன்று அல்லது மாதப் பிரதோஷம் அல்லது சனிப்பிரதோஷம் அன்று திருவண்ணாமலைக்கு வந்து,உடலெங்கும் விபூதி பூசி,கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து,வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு,விரதமிருந்து(சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.அப்படி கிரிவலம் செல்லும் 14 கி.மீ.தூரம் முழுக்க (சுமார் 6 மணி நேரம்) ஓம் சிவசிவஓம் என ஜபித்து வந்தாலே,ஒரு முறை இப்படிச் செய்தாலே,நமது ஊழ்வினை தீர்ந்துவிடும்.நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்;மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.
இந்தத் தகவல்களை வழங்கியவர்: அருட் திரு:டாக்டர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.


நன்றி : திரு. கை. வீரமுனி அவர்கள் (www .aanmigakkadal.com

ஈஷா யோகம் - தியான லிங்கம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை பார்க்கும்பொழுதே , நீங்களும் ஒரு தடவை கண்டிப்பாக போக வேண்டும் என்று தோன்றும். மனதுக்கு மிக ரம்மியமான , இயற்கை கொஞ்சும் சூழலில் , தியான லிங்கத்தை - பிராண பிரதிஷ்டை செய்து இருக்கிறார் - சத்குரு - ஜாக்கி வாசுதேவ். சமீபத்தில் - லிங்க பைரவி ஆலயமும் எழுப்பி இருக்கிறார்.
வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை சென்று வாருங்கள். நம்ம கோயம்புத்தூருக்கு வெகு சமீபம் தான். 


 'ஈஷா' யோகத்தின் கொள்கைகள் உங்களுக்குத் தெரியுமா? யோகம் என்றவுடன் தவம், விரதம் என்று பயப்படத் தேவையில்லை. நடைமுறை வாழ்க்கையின் வளம்தான் அவர்களின் கொள்கைகளாக இருக்கின்றன. அவர்கள் சொல்லக்கூடிய யோகங்களுள் சிலவற்றை நாம் எல்லோருமே செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கவனத்துடனோ அல்லது முழு ஈடுபாட்டுடனோ அல்லது தொடர்ச்சியாகவோ செய்வதில்லை. நம் வசதிக்கேற்ப செய்கின்றோம். அந்த மனநிலையைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டு, வாழ்வின் நித்திய கடமைகளாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இதை கடைபிடித்துக் கொண்டிருக்கும் அத்தனை பெரும், தனது வாழ்வு நல்லா விதமாக மாறி இருப்பதாக கூறுகிறார்கள். 


1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. நிறைய விளையாடுங்கள்; நன்றாக விளையாடுங்கள்.

6. கடந்த ஆண்டில் படித்ததை விட இன்னும் அதிகமான புத்தகங்களை இந்த ஆண்டு படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை நிறைய உண்ணுங்கள். ஆனால், இவை மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களைக் குறைவாக உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுடைய உன்னதமான ஆற்றலைத் தேவையற்ற வம்புகளில் இழக்காதீர்கள்.

14. உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவற்றைப் பற்றி யோசிக்காதீர்கள்.

15. எதிர்மறையான எண்ணங்களைக் கைவிட்டு, ஆக்கபூர்வமான நிகழ்காலத்தில் வாழுங்கள்.

16. 'வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் நாம் அனைவரும் மாணவர்கள். பிரச்சினைகள் என்பது நம்முடைய பாடத்தின் ஒரு பகுதி. அல்ஜீப்ரா வகுப்பு போல அது மாறிவிடும். ஆனால் நம்முடைய படிப்பனுபவம் வாழ்வின் இறுதி வரை வரும்' என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. உலகில் வாழப்போகும் குறுகிய கால வாழ்க்கையில் எவரையும் வெறுக்காமல், எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழுங்கள்.

20. வாழ்க்கையைச் சிக்கலான நிலையாகக் கொள்ளாதீர்கள். 'ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. எல்லா விவாதங்களிலும் நீங்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணாதீர்கள். முரண்பாடுகளையும் மௌனமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

22. கடந்தகால வாழ்க்கையுடன் சமாதானமாகப் போய் விடுங்கள். இதனால் நிகழ்கால வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

23. மற்றவர்களின் வாழ்க்கை நிலையை, உங்களுடனோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையுடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. 

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை உணருங்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பது உங்கள் வேலை இல்லை என்று உணருங்கள்.

27. கடவுள் அனைத்தையும் ஆற்றுபவன் என்று மனதார உணருங்கள்.

28. நல்லதோ கெடுதலோ, எல்லாமே கடந்து போய்விடும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் உங்கள் நண்பர்கள். எனவே அவர்களோடு நிரந்தரமாகத் தொடர்பு வைத்திருங்கள்.

30. பயனில்லாத, அழகில்லாத, மகிழ்ச்சியளிக்காதவைகளில் இருந்து வெளியே வந்து விடுங்கள்.

31. உங்கள் தகுதிக்குத் தேவையான அனைத்தும் உங்களிடம் இருப்பதால் பிறரைப் பார்த்து பொறாமைப்படுவதைத் தவிர்த்து விடுங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது இன்னும் வரவில்லை. நிச்சயம் வந்து விடும் என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் செயல்களையே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு செயலைச் செய்யுங்கள்.

38. உங்களுடைய வரம்பை அறிந்து எந்தச் செயலையும் செய்யுங்கள். அளவுக்கு மீறினால் அம்சமும் இம்சைதான்!

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. யார் மீது நீங்கள் அதிக அக்கறையுடன் இருக்கிறீர்களோ, அவர்களைப் படிக்கச் செய்து இவற்றைப் பரப்புங்கள்!

'ஈஷா' யோகத்தை ஒவ்வொருவரும் பின்பற்றத் தொடங்கினால் நாட்டில் காணப்படும் பொறாமை, கோபம், வன்முறை ஆகிய அனைத்தும் தொலைந்து விடும்! வரும்  புத்தாண்டு நாள் அதற்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்! நமது இணைய தளத்திற்கு வரும் ஆன்மீக அன்பர்களுக்காக கீழே சில தியான லிங்கத்தின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  நன்றி!

பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி, துர்கை, பட்டத்தரச்சி, பெரிய மாரி, மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச் செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே வாழ்க்கைத்துணையாக கிடைப்பார்.


ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.


பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை விலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.


இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ.
 

விருட்ச சாஸ்திரம்


நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும், ஒரு சில விருட்சங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் , ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.. சிலருக்கு  விஸ்வ ரூபம் எடுக்கும்.. சிலருக்கு, பணம், சிலருக்கு நோய், சிலருக்கு குடும்பம் , இது சகலருக்கும் பொருந்தும்.. பிரச்னை இல்லாதவர்கள் ... குழந்தைகள் .. இல்லையேல் ஞானிகள்...

பந்தம், பாசம் அற்று இருக்க வேண்டும்.. இல்லையேல் ஒன்றும் அறியாத குழந்தையாய் இருத்தல் வேண்டும்.  மொத்தத்தில் மனம் நிச்சலனமாய் இருக்க வேண்டும். தன்னை  அறிவதே வாழ்க்கை.  நாம் இந்த பிறவியில் எந்த நோக்கத்திற்காக பிறந்து இருக்கிறோம், அனைத்தும் ஒடுங்கி அந்த பரம்பொருளில் இணைவதே.. முடிவில் வாழ்க்கை என்று தெரிய வரும்.. ஜோதிடம் என்பது அந்த வகையில் ஒரு கருவி நமக்கு. .. நாம் சென்ற பிறவியில் நல்லவனாய் இருந்தோமா.. இந்த பிறவியில் எப்படி இருப்போம்..? நமக்கு எப்போது நேரம் நல்லபடியாக இருக்கும்? எப்போது கடுமையாக இருக்கும்? என்று பல விதங்களில் உங்களுக்கு வழி காட்டும்.. ஜோதிடம் படிக்க, படிக்க , நாம் நம்மை அறியாமலேயே நிறைய ஜாதகங்களை .. தெரிந்தவர்களை, பிரபலங்களை அலசி ஆராய்வோம் ... அது பல விதங்களில் உங்களுக்கு நன்மைகள் செய்யும்.. பல சூட்சுமங்களை நமக்கு உணர்த்தும்.. நீங்கள் மற்றவர்களுக்கு ஜாதக பலன்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, உங்கள் ஜாதகத்தில் நீங்கள் Ph D செய்து தான் ஆக வேண்டும்..   ..


நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு..  உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில்  , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய  நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
 சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற  பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம். 


மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .. 


எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.  

நவ கிரகங்கள் - காரகத்துவம்

ஒருவர் ஜாதகத்தை ஆராயும்போது , எந்த பலன்களுக்கு எந்த கிரகங்களை பார்க்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.  இந்த காராகத்துவங்களை , நீங்கள் கண்டிப்பாக மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்... 



1 . சூரியன் :

உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே . சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும்.

ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார் என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில் கேள்வி எழுகிறது. அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது. 

ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.

ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!

கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும். உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதி தேவதை. ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை. மாணிக்கம் உகந்த ரத்தினம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்!

2. சந்திரன்

'சந்த்ரமா மனஸோ ஜா' என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' ; விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது! 

ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே! முகூர்த்தங்களை நிச்சயம் செய்வது, ஜாதக தசா இருப்பு, திருமணப் பொருத்தம் ஆகிய முக்கியமானவை அனைத்துமே சந்திரனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. 

தென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. உகந்த நிறம் வெள்ளை. சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர். 

விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும். 

மூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது. சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி' என்று கூறப்படுகிறது. 

முத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினம். வெள்ளைக்குதிரை சந்திரனின் வாகனம்!


3. செவ்வாய்
அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன்.

சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். 

கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. 

வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். 

4. புதன்

வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே.

வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம்.

விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம்.

5. குரு

பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். 

குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை  விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன் இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம்.
ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.  

வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.

6. சுக்கிரன்

அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். இவனே வாகனங்களுக்கும் அதிபதி. ஜனன உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவனே. உடலில் வீர்யம் இவன். அணிமணி, ஆபரணம் சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும்.

கிழக்குத் திசை சுக்ரனுக்கு உரிய திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. வைரம் சுக்ரனுக்கு உகந்த ரத்தினம். கருடனே சுக்கிரனின் வாகனம்.

7. சனி

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். 

சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். 

எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம்.

இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். 

மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம்.


8. ராகு

சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். 

அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி.

தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். 

9. கேது

ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான்.

விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம்.

சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை, பிரம்மன் பிரத்யதி தேவதை. வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை. வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம்.