திருத்தலங்கள்

12 ஜோதிர்லிங்க தரிசனம் 


அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில்



மூலவர்:    காளத்தியப்பர், காளத்தீசுவரர் 
அம்மன்/தாயார்:    ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை 
தல விருட்சம்:வில்வம் 
தீர்த்தம்பொன்முகலியாற்று தீர்த்தம் 
புராண பெயர்சீகாளத்தி,  திருக்காளத்தி 
ஊர் காளஹஸ்தி 
மாவட்டம்:   சித்தூர் 
மாநிலம்: ஆந்திர பிரதேசம்



இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும்.



View Larger Map




ஸ்ரீ பத்மாவதி  தாயார் 
திருச்சானூர், ஆந்திரப்ரதேசம்


    ஆந்திரப்ரதேசத்தில் திருப்பதிக்கு 3 மைல் தூரத்தில் உள்ளது திருச்சானூர். இங்கு அலர்மேல் மங்கை கோயில் உள்ளது. இவர் வெங்கடாசலபதியின் மனைவி. இவருக்கு பத்மாவதி என்று மற்றொரு பெயரும் உண்டு. இவர் தாமரை மலரில் இருந்து தோன்றினார் என்று நம்பப்படுகிறது. திருமணம் ஆனபிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடை.யே ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர் என்று வரலாறு பேசப்படுகிறது. இந்த வரலாற்றினை உறுதிப்படுத்துவது போன்று இங்கு நடைபெறும் பூஜைகள் இன்றும் அமைந்துள்ளது. மலையில் வெங்கடேஸ்வரருக்கு வைகானஸ முறையில் பூஜை நடக்கும் போது இங்கு மலை அடிவாரத்தில் தேவிக்கு பாஞ்சராத்ர முறையில் பூஜை நடக்கிறது.


திருப்பதி திருமலையில் சீனிவாசன் இருக்கிறார். திருமலை அடிவாரமான கீழ்திருப்பதியில் இருந்து, 5 கி.மீ., தூரத்திலுள்ள திருச்சானூரில், பத்மாவதி தாயார் அருள்பாலிக்கிறாள். 


கிருஷ்ணாவதாரத்தை முடித்து, பெருமாள் வைகுண்டத்தில் தங்கி இருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி, அநியாயங்கள் பெருகின. மீண்டும் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தைக் காண வந்த நாரதர், "யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?’ என, முனிவர்களை கேட்டார். 

எந்த தெய்வம் சாந்த குணமுள்ளதோ அவருக்கு அதன் பலனை தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேட, பிருகுமுனிவரை அனுப்பி வைத்தனர். பிருகுவும் வைகுண்டம் சென்றார். திருமால், பிருகு முனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். பகவானின் திருவடி பக்தனுக்கு இன்பம், பக்தனின் திருவடி பகவானுக்கு இன்பம் என்பதை, உலகுக்கு உணர்த்தும் நோக்கத்தில், திருமால் கோபம் கொள்ளாமல், உதைத்த பாதத்தை தடவிக் கொடுத்தார். 





ஆனால், திருமாலின் மனைவி மகாலட்சுமிக்கு, முனிவரின் செயலைத் தாங்க முடியவில்லை. முனிவரை தண்டிக்கும்படி திருமாலிடம் கூறினாள். திருமால் மறுத்து விட்டார். கோபம் கொண்டு பூலோகம் வந்து விட்டாள் லட்சுமி. தெய்வங்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடா என கேட்கக் கூடாது. லட்சுமி எங்கிருக்கிறாளோ, அங்கு செழிப்பு ஏற்படும். அதைக்கருதியே, திருமால் இப்படி ஒரு நாடகமாடினார். மாயவன் அல்லவா! திருமாலும், திருமகளை தேடி பூவுலகத்தை சுற்றி அலைந்து, வேங்கடமலையில் மானிட வடிவில் வந்து தங்கினார். கிருஷ்ணாவதார காலத்தில், யசோதையாக இருந்து, இப்போது வகுளாதேவியாகப் பிறந்த பெண், அவரை தன் மகனாக ஏற்றாள். இந்நிலையில், சந்திரகிரி என்ற பகுதியை, ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி, தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி, புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, நல்ல நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத் தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு, "பத்மம்’ என்று பெயர் உண்டு. எனவே, குழந்தைக்கு, "பத்மாவதி’ என்று பெயரிட்டான். 
ராமாவதாரத்தின் போது, வேதவதி என்னும் பக்தை, ராமன் தன் மணாளனாக வேண்டி கோரிக்கை வைத்தாள். ராமனும் அவளிடம், "இப்போது நான் ஏகபத்தினி விரதனாக இருப்பதால், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படி, வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். ஆகாசராஜனின் மகளாக வளர்ந்தாள். அவர்கள் காட்டில் ஓரிடத்தில் சந்தித்தனர். காதல் கொண்டனர். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப் பெருமாள், பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக, திருமலையில் எழுந்தருளினார். 

சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன், பெருமாளுக்கு கோவில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரம் எனும் திருச்சானூரில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள், தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு, காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் உள்ளது. 



புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கும், கார்த்திகை மாதம் பத்மாவதி தாயாருக்கும் பிரம்மோற்சவம் நடக்கும். இந்தாண்டு சற்று முன்னதாக, (ஐப்பசி25) பிரம்மோற்சவம் துவங்கி விடுகிறது. இந்நாட்களில் பத்மாவதி தாயார் தினமும் பவனி வருவதைத் தரிசிக்கலாம்.
________________________________________________________________________________________________

29.03.2012
மூலவர்:விருத்தகிரீசுவரர் (பழமலைநாதர், முதுகுந்தர்) 
உற்சவர்:- அம்மன் விருத்தாம்பிகை (பாலாம்பிகை - இளைய நாயகி) 
தல விருட்சம்:வன்னிமரம் 
தீர்த்தம்:மணி
முக்
தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம் 
ஆகமம்/பூஜை:காமிகம் 
புராண பெயர்:திருமுதுகுன்றம் 
ஊர்:விருத்தாச்சலம் 
மாவட்டம்:கடலூர் 
மாநிலம்:தமிழ்நாடு

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும். காளஹஸ்தியில் உள்ளது போல, இவர் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார். இந்த ஆழத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று.
_________________________________________________
மூலவர்: ஸ்ரீ பூவராகன் 
உற்சவர்: ஸ்ரீயக்ஞவராகன்  தாயார்: அம்புஜவல்லி 
தல விருட்சம்:அரசமரம் 
தீர்த்தம்:நித்யபுஷ்கரணி 
ஊர்:ஸ்ரீமுஷ்ணம் 
மாவட்டம்:கடலூர் 
மாநிலம்:தமிழ்நாடு


















[Gal1]
அம்புஜ வல்லித் தாயாரின் தோழிகள்

இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தானே தோன்றிய மூர்த்தி ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ பூவராகசுவாமி சன்னதி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.
____________________________________________________________