சிறந்த சோதிடர் யார் ?

சோதிட கலை என்பது விஞ்ஞான கலை என்று கூறும்போது, சோதிடம் ஒரு தெய்வீக கலை என்பதை மறந்து விடக்  கூடாது. 

நூற்றுக்கணக்கான சோதிட நூல்களைப் படித்து அதில் வரும் சந்தேகங்களை விளக்கமாகக் கூறித் தெளிய வைக்கும் ஒரு குருவின் உதவியோடு, ஆயிரக்கணக்கான பலவகைப்பட்ட ஜாதகங்களை ஆராய்ந்து, பல ஆண்டுகள் பயிற்சிப் பெற்ற ஒருவர் நல்ல சோதிடர் ஆகிறார்.

அவரே தெய்வ வழிபாட்டில் தவறாமல் ஈடுபட்டு, நல்ல ஒழுக்கங்கள் நிறையப் பெற்றவர் ஆகும்போது, அவர் சிறந்த சோதிடர் ஆகிறார். இவர் ஆராய்ந்து கூறும் சோதிடப் பலன்கள்  தப்பாமல் நடக்கின்றன.

No comments:

Post a Comment